சேலம் மாவட்டத்தில் உள்ள வட்டக்காடு பகுதியில் பிரதீப் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் எலக்ட்ரீசியனாக இருக்கிறார். இவரது உறவினர் காமராஜ் அதே பகுதியில் வசித்து வருகிறார். அவருக்கு கௌதமன், ரூபன், சிபி ஆகிய மூன்று மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த சிலர் காமராஜ் வீட்டிற்கு அருகே பிளக்ஸ் போர்டு அமைப்பதற்காக பள்ளம் தோண்டியுள்ளனர். இதனை காமராஜ், அவரது மகன்கள், பிரதீப் குமார் ஆகியோர் தட்டி கேட்ட போது இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் ஒருவரை ஒருவர் கற்களால் தாக்கி கொண்டனர். இதனால் மண்டை உடைந்து காயமடைந்த பிரதீப் குமார் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து இரு தரப்பினரும் அளித்த புகார்களின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் அதே பகுதியைச் சேர்ந்த வல்லரசு, குமார், 17 வயது சிறுவர்கள் உட்பட 12 பேரை அதிரடியாக கைது செய்தனர்.