ஹைதராபாத்தில் தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வரும் சுதீப் குமார் என்பவரிடம் மஞ்சு என்ற இளம் பெண் ஒருவர் சிகிச்சைக்கு வந்துள்ளார். குழந்தையை பார்ப்பதற்காக வேலையை விட்டுவிட்டு அந்த பெண் வீட்டில் இருந்து குழந்தையை பார்த்து வந்துள்ளார். அதேசமயம் செல்போனையும் அதிகமாக பயன்படுத்தி வந்துள்ளதுடன் வெளிச்சம் இல்லாத அறையில் செல்போனை அதிகமாக பயன்படுத்தி உள்ளார். அவருக்கு சில நேரங்களில் பார்வை கோளாறு ஏற்பட்ட நிலையில் சமீபத்தில் எதையுமே பார்க்க முடியாத அளவிற்கு இந்த பிரச்சனை சென்றுள்ளது. இதனை பரிசோதனை செய்த கண் மருத்துவர் மூளை நரம்பியல் நிபுணர் கதிரை சந்திக்க கூறியுள்ளார்.

சில ஆலோசனைகளை வழங்கிய அந்த மருத்துவர், அந்த இளம் பெண்ணுக்கு ஸ்மார்ட்போன் விஷன் சிண்ட்ரோம் எனப்படும் குறைபாடு ஏற்பட்டுள்ளதை கண்டறிந்தார். மேலும் தொடர்ந்து செல்போன் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என கூறியதுடன் தற்போது அந்த இளம் பெண் பிரச்சனை பூரணமாக குணமாகி உள்ளது. கணினிகளில் அதிக நேரத்தை செலவிடுபவர்களை எச்சரித்துள்ளதுடன் சில ஆலோசனையும் அவர் கொடுத்துள்ளார். அதாவது 20 நிமிடங்கள் போனை பயன்படுத்தினால் அடுத்த 20 நிமிடங்கள் ஓய்வு எடுக்கவும். அப்போது 20 அடி தொலைவில் உள்ள பொருட்களை பார்க்கும்படி அவர் வலியுறுத்தியுள்ளார். 20-20-20 இந்த மருத்துவரின் ரூல் என்கிறார்கள் மருத்துவர்கள்.