
அதிமுக உள் கட்சி விவகாரம் இரட்டை இலை தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் பதில் மனு தருவதற்கு இன்று தான் கடைசி நாள் என்று தேர்தல் ஆணையம் அறிவித்த நிலையில் புகழேந்தி பதில் மனு தாக்குதல் செய்துள்ளார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு மட்டுமே இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஆணை பிறப்பித்து இருந்தது.
உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக நாடாளுமன்றத் தேர்தலையொட்டி இரட்டை இலை சின்னம் பழனிச்சாமிக்கு வழங்கப்பட்டது. நிலுவையில் இருக்கும் சிவில் வழக்குகள் முடியும் வரை இரட்டை இலை சின்னத்தை யாருக்கும் கொடுக்கக் கூடாது என்று அந்த பதில் மனுவில் எழுதியிருந்தார்.