உத்தர் பிரதேஷ் மாநிலம் காசியாபாத் பகுதியில் செயல்பட்டு வந்த பிகனர் என்ற இனிப்பு கடையில் வாடிக்கையாளர் ஒருவர் இரண்டு சமோசா வாங்கியுள்ளார். ஆனால் சமோசா வாங்கியவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அவர் வாங்கிய ஒரு சமோசாவின் உள்ளே தவளையின் கால் இருந்துள்ளது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர் காணொளியாக பதிவு செய்து கடை உரிமையாளரிடம் சண்டையிட்டுள்ளார்.
இது குறித்து காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு விரைந்து வந்த போலீசார் கடை உரிமையாளரை கைது செய்ததோடு உணவை சோதனை செய்ய அனுப்பி வைத்துள்ளனர். இது தொடர்பான காணொளி தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
https://x.com/SachinGuptaUP/status/1834058690628124839