தமிழகத்தில் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக பல்வேறு மாவட்டங்களுக்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறைகள் வழங்கப்பட்டது. புயல் காரணமாக விடுமுறைகள் என்பது வழங்கப்பட்ட நிலையில் மழையின் தாக்கத்திலிருந்து மாவட்டங்களில் மீண்டு வருகிறது. இருப்பினும் விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மழையின் தாக்கம் அதிகமாக இருந்ததால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இன்னும் விழுப்புரத்தில் மீட்பு பணிகள் என்பது முடிவடையாததால் இன்றும் பள்ளி கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் விடுமுறை வழங்கியுள்ளார். அதன்படி இன்று முதல் தொடர்ந்து 3 நாட்களுக்கு விடுமுறை. மேலும் இதைத் தொடர்ந்து வருகிறது திங்கள் கிழமை வழக்கம் போல் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளும் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.