சென்னையில் அக்டோபர் மாதம் தொடக்கம் முதல் தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது. தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்த நிலையில் இன்று எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையே நீடிக்கிறது.

அதன்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் 7120 ரூபாயாகவும், ஒரு சவரன் 56,960 ரூபாயாகவும் இருக்கிறது. அதன் பிறகு 18 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம 5885 ரூபாயாகவும், ஒரு சவரன் 47,080 ரூபாயாகவும் இருக்கிறது. மேலும் வெள்ளி விலைகளும் மாற்றம் இன்றி ஒரு கிராம் 103 ரூபாயாகவும், ஒரு கிலோ வெள்ளி 1,03,000 ரூபாயாகவும் இருக்கிறது.