தஞ்சாவூர் திருவையாறு சத்குரு தியாகராஜர் சுவாமிகளின் 176 ஆவது ஆராதனை விழா கடந்த ஆறாம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் முக்கிய நிகழ்வான ஆராதனா விழா இன்று நடைபெறுகிறது. இதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர். என்.ரவி கலந்து கொள்கிறார். இதை முன்னிட்டு இன்று ஒரு நாள் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.