வாரிசு, துணிவு திரைப்பட கொண்டாட்டங்களுக்கே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றது.

வினோத்-அஜித் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படம் உருவாகியுள்ளது. இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். மேலும் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது.

வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ளது. இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கின்றார். பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு, கணேஷ் வெங்கட்ராம் உள்ளிட்ட பலர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படமும் இன்று வெளியாகியுள்ளது.

அஜித்-விஜய் இருவரின் திரைப்படமும் ஒரே நேரத்தில் வெளியாகி இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவுகின்றது. இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் வாரிசு, துணிவு திரைப்பட கொண்டாடங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றது. பொது மக்களுக்கு இடையூறு அளிக்கும் வகையில் கொண்டாட்டங்கள் கூடாது. பொதுமக்களை இடையூறு செய்யும் வகையில் செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நெல்லை மாநகர காவல் ஆணையாளர் ராஜேந்திரன் எச்சரிக்கை விடுத்திருக்கின்றார். மேலும் அரசின் சட்ட திட்ட விதிகளை பின்பற்றி நடந்து கொள்ள அஜித்-விஜய் ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.