கொல்கத்தாவின் ஷாலிமர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்னை நோக்கி வந்த போது கோரமண்டல் எக்ஸ்பிரஸ், தடம் புரண்ட சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 294 பேர் உயிரிழந்த நிலையில் 900க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் பலர் கவலைக்கிடமாக உள்ள நிலையில் பலரும் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த ரயில்வே வாரிய உறுப்பினர் ஜெயா வர்மா, ஒடிசாவில் ரயில் விபத்து நடந்த பஹாநாகா ரயில் நிலையத்தில், இன்று இரவு 8 மணிக்குள், 2 ரயில் பாதைகள் முழுமையாக தயாராகிவிடும். இந்த 2 ரயில் பாதைகளிலும், முதற்கட்டமாக ரயில்கள் மெதுவாக இயக்கப்படும் என நம்புகிறேன்” என தகவல் தெரிவித்துள்ளார்.