கடந்த வருடத்தில் இருந்து அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக பல்வேறு தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் சமூக நலம் மற்றும் மகளிர் உரிமை துறையில் உதவி இயக்குனர் பதவிக்கும் எழுத்துத்தேர்வு நடைபெற்று முடிந்த நிலையில் இதற்கான இன்று (ஜன.19ம் தேதி) நேர்முக தேர்வு நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

கடந்த நவ. மாதம் 5ம் தேதி நடைபெற்ற தேர்வில் 1,444 பேர் எழுதினர். இதில், 30 பேர் தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு இன்று (ஜன. 19ம் தேதி) நேர்முக தேர்வு நடைபெறுகிறது. இவர்கள் பதிவெண் கொண்ட பட்டியல் www.tnpsc.gov.inல் வெளியிடப்பட்டுள்ளது.