தமிழகத்தில் கடந்த 2013 ஆம் வருடம் ஆசிரியர் நியமனத்தில் கூடுதல் மதிப்பெண் வழங்கப்படும் வெயிட்டேஜ் முறையானது பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த வெயிட்டேஜ் முறையை பின்பற்றுவதில் குழப்பம் இருப்பதாகவும், எல்லோருக்கும் பணி கிடைப்பதில் பாதிப்பு ஏற்படுவதாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தது. இந்த நிலையில் பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியர் நியமன தேர்வில் வெயிட்டேஜ் எனப்படும் கூடுதல் மதிப்பெண் வழங்கும் முறையை அமல்படுத்த வேண்டாம் என தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியத்தை சீரமைக்க அமைக்கப்பட்ட குழு அளித்த பரிந்துரைகள் அடிப்படையில், பள்ளிக்கல்வி துறை செயலர் காகர்லா உஷா அரசாணை பிறப்பித்துள்ளார். அதில் TNPSCஐ போன்று, டிஆர்பியிலும் இனி வெயிட்டேஜ் முறை அமல்படுத்தப்படாது என்று கூறப்பட்டுள்ளது.