இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு கடந்த மே 6ஆம் தேதி தொடங்கி ஜூன் 6-ம் தேதியுடன் முடிவடைந்தது. இதற்கு மொத்தம் 2,49,918 பேர் விண்ணப்பித்திருந்தனர். இந்த நிலையில் அவகாசத்தை நீட்டிக்க மாணவர்களின் பெற்றோர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில் ஜூன் 11ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே இளநிலை பொறியியல் படிப்பில் சேர விருப்பமுள்ள மாணவர்கள் www.tneaonline.org என்ற இணையதளத்தில் நாளைக்குள் விண்ணப்பிக்கலாம்.