இந்தியாவில் வருகின்ற ஏப்ரல் மாதம் முதல் மதுரை, அகர்தலா, இம்பால்,போபால் மற்றும் சூரத் ஆகிய ஐந்து விமான நிலையங்கள் 24 மணி நேரமும் இயங்கும் என்று விமான போக்குவரத்து ஆணையரகம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதனால் இந்த ஐந்து நகரங்களிலும் கூடுதல் விமானங்கள் இயக்கப்படும் எனவும் அதற்கான ஏற்பாடுகளை விமான நிலைய நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே மதுரை விமான நிலையம் 24 மணி நேரமும் செயல்பட வழிவகை செய்யுமாறு மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த அறிவிப்பு விமான பயணிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.