தமிழ் சினிமாவில் அல்டிமேட் ஸ்டார் ஆக வலம் வரும் நடிகர் அஜித் இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் 3-வது முறையாக நடித்த துணிவு திரைப்படம் கடந்த மாதம் 11-ஆம் தேதி ரிலீஸ் ஆகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கொக்கேன் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்கள். இந்த படம் 200 கோடிக்கும் மேல் வசூல் சாதனை புரிந்தது.
இந்த படத்திற்கு பிறகு நடிகர் அஜித்தின் ஏகே 62 திரைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்குவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், நடிகர் அஜித்துக்கு ஸ்கிரிப்ட் பிடிக்காததால் விக்னேஷ் சிவனுக்கு பதிலாக மகிழ் திருமேனி ஏகே 62 திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பை கைப்பற்றியதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் துணிவு திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி நடிகர் அஜித்தின் துணிவு திரைப்படம் பிப்ரவரி 8-ம் தேதி netflix ஓடிடி தளத்தில் வெளியாகிறது. மேலும் இந்த அறிவிப்பு அஜித் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.