நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய சேவைகளை அவ்வப்போது வழங்கி வருகிறது. இந்த சேவைகள் வாடிக்கையாளர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் அடுத்தடுத்து பல அறிவிப்புகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அதன்படி எஸ்பிஐ வங்கி தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதாவது வீட்டிலிருந்து வெளியேற முடியாத மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயதானவருக்காக எஸ்பிஐ வங்கி SBI Doorstep Banking வசதியை வழங்குகிறது. இதற்காக தனியாக சேவை கட்டணம் வசூலிக்கப்பட்டாலும் தேவைப்பட்டோருக்கு இது பயனுள்ள சேவையாக இருந்து வருகிறது. இதில் பதிவு செய்து சேவையை வேண்டினால் அதற்கு உண்டான நபர் உங்கள் வீட்டுக்கே நேரடியாக வந்து வங்கி தேவைகளை பூர்த்தி செய்வார்.