சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மகரவிளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் மாதம் நடை திறக்கப்பட்ட நிலையில் பக்தர்கள் அனைவரும் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இந்த வருடம் பக்தர்கள் அனைவருக்கும் ஆன்லைன் முன்பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்ட உள்ளது. அவ்வாறு முன்பதிவு செய்ய இயலாத பக்தர்களுக்கு ஸ்பாட் புக்கிங் வசதியும் செய்து தரப்பட்டுள்ளது. இந்நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஜனவரி 14-ஆம் தேதி மகரவிளக்கு ஜோதி முடிந்த பின்பும் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

அதனால் பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஜனவரி 19ஆம் தேதி வரை சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது பக்தர்கள் வருகை வெகுவாக குறைந்துள்ளதால் தரிசன நேரம் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி அதிகாலை ஐந்து மணி முதல் மதியம் ஒரு மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை தரிசனம் செய்யலாம் எனவும் ஜனவரி 20ஆம் தேதி கோவில் நடை அடைக்கப்படும் எனவும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.