தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் கடந்த ஒன்பதாம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத் தொடரில் ஆளுநர் அரசு தயாரித்த உரையை முழுமையாக படிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அவர் திராவிட மடல் தமிழ்நாடு, பெண்ணுரிமை, மத நல்லிணக்கணம், சமூக நீதி, சமத்துவ உள்ளிட்ட வார்த்தைகளையும் மறைத்த மூத்த தலைவர்களான அம்பேத்கர், அண்ணா,காமராஜர் மற்றும் கருணாநிதி உள்ளிட்டோரின் பெயர்களையும் அவர் வாசிக்காமல் விட்டுவிட்டார். இதனைத் தொடர்ந்து ஆளுநர் உரைக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியதால் அவையை விட்டு ஆளுநர் ரவி பாதியிலேயே வெளியேறினார்.

இந்நிலையில் தமிழ்நாடு ஆளுநர் ரவி தற்போது டெல்லி கிளம்பி சென்றுள்ளார். அங்கு அவர் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது. சமீபகாலமாக தமிழ்நாடு பெயர் சர்ச்சை மற்றும் சட்டமன்ற விவகாரம் ஆகியவற்றால் ஆளுநருக்கு அரசுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு டெல்லி சென்று வந்த நிலையில் தற்போது மீண்டும் ஆளுநர் டெல்லி சென்றுள்ளார்.