சென்ற நவ,.26 ஆம் தேதியன்று அமெரிக்க நாட்டின் நியூயார்க் நகரிலிருந்து டெல்லிக்கு வந்துகொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்தில், 1 ஆண் பயணி, பெண் பயணி மீது சிறுநீர் கழித்ததாக தகவல் வெளியாகியது. இதுகுறித்து விமான போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் உயரிய அமைப்பான சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம், ஏர் இந்தியாவிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. அதன்பின் ஏர் இந்தியா விளக்கமளித்தது.

இந்நிலையில் விமானத்தில் யாராக இருந்தாலும் முறைகேடாக நடந்துகொண்டால் உடனே அதிகாரிகளிடம் அது தொடர்பாக தகவலளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிரச்சினை சுமூகமாக தீர்க்கப்பட்டாலும் தகவல் தெரிவிக்காமல் இருக்கக்கூடாது என ஏர் இந்தியா சிஇஓ கேம்பெல் வில்சன் அனைத்து ஊழியர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளார்.