
நாடு முழுவதும் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் என்பது அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஹெல்மெட் போடாததால்தான் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக சமீபத்தில் மத்திய மந்திரி தெரிவித்தார். இதன் காரணமாக சாலை விழிப்புணர்வு பொதுமக்கள் மத்தியில் தொடர்ந்து ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் புதுச்சேரியிலும் சாலை விபத்துகளால் உயிரிழப்புகள் என்பது அதிகரித்துள்ளது. இதன் காரணமாக புதுச்சேரியில் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் இன்று முதல் இந்த புதிய சட்டம் அமலுக்கு வர இருக்கிறது. அதன்படி இனி ஹெல்மெட் போடாமல் வாகனம் ஓட்டினால் முதலில் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். மேலும் தொடர்ந்து ஹெல்மெட் போடாமல் வண்டி ஓட்டினால் மூன்று மாதங்களுக்கு டிரைவிங் லைசென்ஸ் ரத்து செய்யப்படும்.