தமிழகத்தில் பத்திரப்பதிவுத்துறையில் சமீப காலமாக பல அதிரடி மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் சமீபத்தில் பத்திரப்பதிவுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து போலி பத்திர பதிவுகளை தடுப்பதற்காக ஜிபிஎஸ் இயக்கப்பட்ட புகைப்பட ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று பத்திரப்பதிவு துறை உத்தரவிட்டது.

தற்போது அதிகரிக்கும் போலி ஆவண பதிவை குறைப்பதற்காக இந்த புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தற்போது பத்திரப்பதிவுக்கு இனிமேல் அசல் பத்திரம் மற்றும் பட்டா வில்லங்கச் சான்று உள்ளிட்ட சொத்துக்களுக்கு அனைத்து ஆதாரங்களும் இருந்தால் மட்டுமே பத்திரம் பதிவு செய்யப்படும் என்று அமைச்சர் மூர்த்தி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.