கம்பர்லேண்டில் வசிக்கும் புட்ச் மரியன்(82), வால்மார்ட்டில் காசாளராக பணியாற்றினார். இந்த வயதிலும் அவர் உழைப்பதை கண்ட டிக்டாக் பிரபலங்கள் நிதி திரட்ட முடிவு செய்தனர். இனிமேல் வருகிற நாட்களில் அவர் மகிழ்ச்சியாக ஓய்வு நாட்களை கழிக்கவேண்டும் என முடிவு செய்த டிக்டாக் பிரபலங்கள், புட்ச் மரியன் வேலை செய்யும் வீடியோவை வெளியிட்டனர்.

Rory McCarty என்பவர்தான் முதன் முதலில் இந்த வீடியோவை வெளியிட்டார். டிசம்பர் 17ம் தேதி அவர் வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகியது. 11 வயதில் பணியாற்ற தொடங்கிய புட்ச் மரியன் தன்னுடைய 82வது வயதிலும் உழைத்துக் கொண்டிருப்பதாக Rory McCarty தெரிவித்தார். அவரின் இந்த வீடியோவை பார்த்த பல பேரும் தங்களால் இயன்ற நிதியை கொடுக்க முயன்றனர்.

அந்த நிதி முழுவதும் GoFundMe பக்கத்தின் வாயிலாக சேகரிக்கப்பட்டது. முதல் 24 மணிநேரத்தில் 50 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் திரண்ட நிலையில், பின் 1 மில்லியன் அமெரிக்க டாலராக மாறியது. இதன் வாயிலாக 80 லட்சம் ரூபாய் பெற்று புட்ச் மரியன் மில்லியனராக மாறினார். இந்த நிதி மூலமாக புட்ச் மரியன் இனி வரும் காலங்களை மகிழ்ச்சியாக அனுபவிக்க முடியும்.