நாட்டில் தினசரி சாலை விபத்துகளினால் ஏற்படும் உயிரிழப்பு சம்பவங்கள் என்பது நடந்து கொண்டுதான் இருக்கிறது. இதனால் மத்திய அரசாங்கமும் மாநில அரசும் சாலை விபத்துகளை கட்டுப்படுத்துவதற்கான அனைத்து விதமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் நாட்டில் அரைமணி நேரத்தில் 18 சாலை விபத்துகள் நடப்பதாகவும் அதில் 46 பேர் உயிரிழப்பதாகவும் புள்ளிவிவரங்கள் கூறுகிறது. அதே நேரத்தில் ஒரு நாளைக்கு 1130 சாலை விபத்துக்கள் நடப்பதாகவும் இதனால் 422 பேர் வரை உயிரிழப்பதாகவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதேபோன்று சாலை விபத்துகளினால்  காயமடைபவர்களின் எண்ணிக்கையும் அதிகம்.

இந்நிலையில் தமிழக மருத்துவ நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது சாலை விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு  மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பவர்களுக்கு உதவி தொகை வழங்கப்படும். இந்த உதவி தொகையானது தற்போது 2 லட்சம் வரை உயர்த்தப்பட உள்ளதாகவும் இது தொடர்பாக பரிசீலனைகள் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் சாலை விபத்துகளில் சிக்கியவர்களை பிரச்சினை வரும் என்ற பயத்தில் சிலர் அப்படியே விட்டுவிட்டு செல்வார்கள். இதன் காரணமாக அவர்களின் உயிரை காக்கும் பொருட்டு சாலை விபத்தில் சிக்கியவர்களை மீட்பவர்களுக்கு பரிசுத் தொகையை அரசு அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.