கொரோனா காலகட்டத்தில் வீட்டிலிருந்து பணி செய்ய தொடங்கிய ஐடி ஊழியர்கள் பலர் இன்னும் அலுவலகம் திரும்ப மறுத்து வருகின்றனர். அவர்களை அலுவலகத்திற்கு வர வைக்க புதிய ஆயுதத்தை கையில் எடுத்துள்ளது டிசிஎஸ் நிறுவனம். 85 சதவீத அலுவலக வருகை பதிவே இருந்தால் மட்டுமே இனி variable pay கொடுக்கப்படும் என்று அறிவித்துள்ளது. Variable pay என்பது சம்பளத்தில் கொடுக்கப்படும் ஒரு பகுதியாகும்.