விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கினார். இந்த கட்சியின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டியில் விமர்சையாக நடைபெற்றது. விஜய் திமுக மற்றும் பாஜக அரசியல் கட்சிகளை நேரடியாக விமர்சித்து பேசினார். விஜயின் பேச்சுக்கு பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அரசியல் கட்சியினர் விமர்சனம் தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் தான் தமிழக வெற்றிக்கழக கட்சியின் செயற்குழு கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
2026-ஆம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தலை எதிர்கொண்டு விஜய் அடுத்தடுத்த செயல்பாடுகளில் தீவிரமாக இறங்கியுள்ளார். இந்த நிலையில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நேரில் சென்று ஆய்வு செய்யுமாறு பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்துக்கு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் உத்தரவு பிறப்பித்துள்ளார். முதற்கட்டமாக பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் ஆய்வு நடைபெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது. வருகிற டிசம்பர் மாதத்திற்குள் இந்த ஆய்வு பணியை முடிக்கவும் விஜய் அறிவுறுத்தியுள்ளார்.