புதுக்கோட்டை சென்ற சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்கள் சந்திப்பில் 2026 தேர்தலில் திமுகவும், விடுதலை சிறுத்தை கட்சியும் கூட்டணியாக தான் இருப்போம். விசிக தலைவர் திருமாவளவன் எப்போதும் கூட்டணியை விட்டு செல்ல மாட்டார். திமுக மீண்டும் 2-வது முறையாக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று முதல்வர் ஸ்டாலின் ஆட்சி அமைப்பார் என்று கூறியுள்ளார். மேலும் எடப்பாடி பழனிச்சாமி பகல் கனவு கண்டு கொண்டிருக்கிறார். அவருடன் எந்த கட்சியும் கூட்டணி வைக்க தயாராக இல்லை தேமுதிக எப்போது வேண்டுமானாலும் கூட்டணியை விட்டு செல்வார்கள் என கூறினார்.
மேலும் திமுக கூட்டணியை பிரிக்க யார் சதி வேலை செய்தாலும், அதில் நாங்கள் சிக்க மாட்டோம் எனவும், எந்த வகையிலும் 2026 களம் மாறாமல் கூட்டணி அமைத்து வெற்றி பெறுவோம் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். விஜய் கட்சி தொடங்கியதால் எங்களுக்கு எந்த வித பயமும், பதற்றமும், கவலையும் இல்லை என கூறிய ரகுபதி பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது என தெரிவித்தார். 2026 தேர்தல் பணிகளில் நங்கள் இறங்கி விட்டோம், எங்களுடைய திட்டங்களையும் மக்களுக்கு கொண்டு சென்று அதன் மூலம் மக்களின் வாக்குகளை பெறுவதை யாராலும் தடுக்க முடியாது என ரகுபதி கூறியுள்ளார்.