தமிழக வெற்றி கழகத்தினருக்கு தற்போது விஜய் ஒரு அதிரடியான உத்தரவினை பிறப்பித்துள்ளார். அதாவது வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்கள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு விஜய் உத்தரவிட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வருகிற நவம்பர் 16, 17, 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்கள் நடைபெற இருக்கிறது. இதில் வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்வதோடு 18 வயதில் நிரம்பியவர்கள் புதிய வாக்காளர் அட்டைக்கும் விண்ணப்பிக்கலாம். இதன் காரணமாக தற்போது பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் விஜய் உத்தரவின் பெயரில் 2 வாரங்களில் ஆட்டோ பிரச்சாரம் மூலமாகவும் துண்டு சீட்டு விநியோகம் செய்தும் பொது மக்களிடம் உரிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
மேலும் வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றி கழகம் போட்டியிடும் நிலையில் கண்டிப்பாக தமிழ்நாட்டின் முதல்வராக 2026 இல் விஜயை ஆக்குவோம் என்று புஸ்ஸி ஆனந்த் கூறியிருந்தார். ஏற்கனவே தமிழ்நாட்டு அரசியல் களத்தில் விஜய் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்துவார் என்று கூறப்பட்டு வரும் நிலையில் தற்போது வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு விஜய் உத்தரவு பிறப்பித்துள்ளார்.