ஐபிஎல் தொடரின் 36-வது போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான 223 ரன்கள் இலக்கை கடைசி வரை போராடி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 1 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. பிலிப் சால்ட் (14 பந்தில் 48 ரன்), கேப்டன் வெங்கடேஷ் ஐயர் (50 பந்தில் 36 ரன்) ஆகியோரின் பேட் மூலம் உண்டான வானவேடிக்கையால் வலுவான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேகேஆர் மகத்தான ஸ்கோரை அமைக்க, ஆர்சிபி முக்கியமான அரை சதங்களுடன் ஸ்கோர் துரத்தும் வேட்டையில் தங்களைத் தக்க வைத்துக் கொண்டது. வில் ஜாக்ஸ் (32 பந்துகளில் 55), ரஜத் பதிதர் (23 பந்துகளில் 52)

கடைசி ஓவரில் 21 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், மிட்செல் ஸ்டார்க்கிற்கு எதிராக கரண் சர்மா முதல் நான்கு பந்துகளில் மூன்று சிக்ஸர்களை அடித்து வெற்றி வாய்ப்பை RCB க்கு சாதகமாகன சூழ்நிலைக்கு கொண்டு வந்தார். ஆனால் அதற்கு அடுத்த பந்தில் அவர் ஆட்டமிழந்தார். பின் 1 பந்தில் 3 ரன்கள் தேவைப்பட்டநிலையில், லாக்கி பெர்குசனின் ஒரு ஒற்றை ஓட்டத்தை அடுத்து RCB இன் இன்னிங்ஸ் முடிவில் ஒரு ரன் குறைவாக இருந்தது. RCB சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் இந்த தோல்வி அவர்களது ப்ளே ஆப் வாய்ப்பை குறைத்துள்ளது. அவர்களின் முதல் எட்டு போட்டிகளில் ஒரே ஒரு வெற்றி மட்டுமே பெற்றுள்ளது. மீதமுள்ள அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி பெற்றாலும், புள்ளிகளின் அடிப்படையில் பிளேஆஃப்களுக்கு தகுதி பெறுவது சாத்தியமில்லை. இருப்பினும், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் ரேட் அதிகரிப்பதன் மூலமும் பிற அணிகளின் ஆட்ட சூழ்நிலை அவர்களது ரன் ரேட் பொறுத்து மட்டுமே உள்ளே நுழைவதற்கான வாய்ப்பு உள்ளது.