
இந்தோனேஷியா நாட்டின் டனிம்பர் தீவு மாகாணத்தை மையமாகக் கொண்டு நேற்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆக பதிவாகியுள்ளது. இதனால் கட்டிடங்கள் அதிர்ந்தது. மேலும் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தின் காரணமாக இந்தோனேசியாவில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.