இந்தியாவிலேயே சுற்றுலா துறையில் தமிழ்நாடு தான் முதல் மாநிலமாக திகழ்வதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பெருமிதத்தோடு தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது, சுற்றுலாத்துறைக்கு இயற்கை வரப்பிரசாதமாக இருக்கிறது. இதற்கு முக்கியமான காரணம் தமிழகத்தில் அதிக அளவிலான கோவில்கள் இருக்கிறது.
தமிழகத்தில் உள்ள கோவில்களை காண்பதற்காக பல்வேறு சுற்றுலா பயணிகள் வருகை பெறுகிறார்கள். கிட்டத்தட்ட ஒரு வருடத்தில் தமிழ்நாட்டிற்கு 12.50 லட்சம் அயல்நாட்டு சுற்றுலா பயணிகள் வருகை புரிந்துள்ளனர். மேலும் தமிழ்நாடு சுற்றுலா துறையில் இந்திய அளவில் முதலிடமாக இருப்பது என்பது மிகவும் பெருமைக்குரிய விஷயம் என்று அமைச்சர் நெகிழ்ச்சியோடு கூறியுள்ளார்.