சிறிய அளவிலான நிலநடுக்கத்தினால் அழுத்தமானது வெளியேறி இந்தியாவினை பெரிய அளவிலான நிலநடுக்கத்தில் இருந்து பாதுகாப்பதாக அறிவியல் வல்லுநர்கள் கூறியுள்ளனர். அதேபோல் பெரிய அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டாலும் இந்தியா அதனை எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது, மக்கள் மற்றும் இந்தியாவில் உள்ள நிறுவனங்கள் முறையான விதிமுறைகளை பின்பற்றினால் பெரிய அளவிலான நிலநடுக்கங்களை குறைக்க முடியும் நிலநடுக்கத்தை தாங்கி நிற்கும் தரமான கட்டிடங்களை கட்டுவதன் மூலமாக நிலநடுக்கத்தினால் ஏற்படும் பேரழிவினை குறைத்துக் கொள்ளலாம்.

சில சமயங்களில் ரிக்டர் அளவுகோலில் 4 அல்லது 5 என பதிவாகும் அளவில் நிலநடுக்கங்கள் ஏற்படுகிறது. புவியின் மேல் உள்ள புவி தட்டுகள் தொடர்ந்து நகர்வதனால் நிலநடுக்கங்கள் ஏற்படுகிறது. இந்தியாவின் வடமேற்கு பகுதியில் 3 தட்டுகள் சந்திக்கும் பகுதி அமைந்துள்ளது. இந்த மூன்று தட்டுகளும்  சந்திக்கும் இடம் மிகவும் கடினமாக இருக்கின்ற காரணத்தினால் அதே அளவில் அழுதத்தினை அவை தாங்கி நிற்கிறது. அந்த அழுத்தம் வெளிப்பட்டால் அதிக அளவிலான பாதிப்புகள் ஏற்படுகிறது. அதேபோல் துருக்கியில் மூன்று கோடி தட்டுகள் சந்திக்கும் இரண்டு பகுதிகள் உள்ளது. அவற்றில் ஒன்றான அரேபியன் புவிதட்டு, ஆப்பிரிக்கன் புவிதட்டு மற்றும் அந்தோனியன் புவிதட்டு சந்திக்கும் பகுதியில் உடைப்பு ஏற்பட்டு அதிக அளவிலான அழுத்தம் வெளியேறியதன் காரணமாக இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனால் 25,000 மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். குவித்தட்டுகள் பெரிதாக இருந்தால் அவை உடைபடுவதற்கு அதிக நேரம் தேவைபட்டுள்ளது. அதன் காரணத்தினால் 24 மணி நேரத்தில் இரண்டு முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது. இந்தியா நிலநடுக்கம் நடைபெறக்கூடிய பகுதியில் தான் இருக்கிறது. ஆனாலும் இந்தியாவில் அதிக அளவிலான சிறிய நிலநடுக்கங்கள் தினம் தோறும் நடைபெறுகிறது. ஆற்றல் மெல்ல மெல்ல அவ்வப்போது வெளியிடப்படுகிறது. இதனால் இந்தியாவில் பெரிய அளவிலான பொருட்சேதங்களையும் உயிர் சேதங்களையும் ஏற்படுத்தும் அளவிற்கு நிலநடுக்கம் குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை என தெரிவித்துள்ளனர்.