பாஜக கூட்டணியில் நாம் தமிழர் கட்சியை இணைக்க அக்கட்சி நிர்வாகிகள் தன்னிடம் ஆசை வார்த்தைகளை கூறியதாக சீமான் தெரிவித்துள்ளார். இது குறித்து தேனியில் பேசிய அவர், “பாஜக கூட்டணியில் நாம் தமிழர் கட்சி இணைந்திருந்தால் ரூ.500 கோடியும், 10 சீட்டுகளும் கிடைத்திருக்கும். அவர்களுடன் கூட்டணி வைக்காததால் நான் கேட்ட சின்னம் கிடைக்கவில்லை. பாஜகவின் கட்சி அலுவலகமாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது” என்றார்