தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று (ஏப்ரல் 1) நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், “கச்சத்தீவை மீட்காமல் பத்து ஆண்டுகளாக கோமாவில் இருந்த பாஜக, இந்த பத்து நாட்களில் மட்டும் இதைப்பற்றி பேசி வருகிறது.

நான் 13 ஆண்டுகளாக இந்த கச்சத்தீவைப் பற்றி பேசி வருகிறேன். இந்த நாடாளுமன்ற தேர்தலுக்குள் கச்சத்தீவை பாஜக மீட்டுக் கொடுத்தால் நானும் எனது கட்சியினரும் அவர்களுக்கே வாக்களிக்கிறோம்” என தெரிவித்துள்ளார்.