
இன்றைய காலகட்டத்தில் இணையதளத்தில் பிரபலமாக வேண்டும் என்பதற்காக இளைஞர்கள் விபரீதமான செயல்களில் ஈடுபடுகிறார்கள். சமூக வலைதளத்தில் லைக்ஸ் வாங்கி பிரபலமாக வேண்டும் என்பதற்காக பின் விளைவுகளை யோசிக்காமல் விபரீத முயற்சியில் ஈடுபட்டு பின்னர் சிக்கலில் சிக்கிக் கொள்கிறார்கள். இதனால் சில நேரங்களில் உயிரிழப்புகள் கூட ஏற்படுகிறது. அப்படிப்பட்ட ஒரு சம்பவம் தான் தற்போது அரங்கேறியுள்ளது.
அதாவது இணையதளத்தில் பிரபலமாக வேண்டும் என்பதற்காக ஒரு வாலிபர் தன்னுடைய உதட்டில் ஒரு GUM போட்டு ஒட்டுகிறார். அதாவது Superglue என்ற கம்மை வைத்து அந்த வாலிபர் சாகசம் செய்ய நினைத்து தற்போது வாயை கூட திறக்க முடியாமல் பேச முடியாமல் சாப்பிட முடியாமல் பரிதவிப்பில் இருக்கிறார். முதலில் அவர் உதட்டில் கம்மை ஒட்டி விட்டு ஹாயாக சிரித்துக்கொண்டே பின்னர் வாயை திறக்க முயற்சிக்கிறார். ஆனால் அவரால் முடியவில்லை. மேலும் இதன் காரணமாக அவர் கண்கலங்கி நிற்பது பார்க்கவே பரிதாபமாக இருக்கிறது. இதோ அந்த வீடியோ,
View this post on Instagram