பாமக கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று கள்ளக்குறிச்சிக்கு சென்ற நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, மரக்காணத்தில் விஷ சாராயம் குடித்து உயிரிழப்புகள் நடைபெற்ற போதிலும் முதல் அமைச்சர் இதே கருத்தைதான் கூறினார். கள்ளச்சாராய மரணங்கள் தமிழக அரசுக்கு மிகப்பெரிய அவமானம். இதற்கு ஒரே தீர்வு பூரண மதுவிலக்கு மட்டும் தான். இதை ஒரே நாளில் கொண்டுவர முடியாது. எனவே படிப்படியாக அமல்படுத்த முயற்சி செய்யுங்கள்.

இந்த சம்பவத்திற்கு முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும். இல்லையெனில் அமைச்சர் எ.வ.வேலு மற்றும் அமைச்சர் முத்துசாமி ஆகியோர்கள் பதவி விலக வேண்டும். கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்பி மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். மேலும் ஒரு மாதம் மட்டும் ஆட்சியை எங்களிடம் கொடுங்கள். நாங்கள் தமிழகம் முழுவதும் போதைப்பொருள் புழக்கத்தை ஒழித்துக் காட்டுவோம் என்று கூறினார்.