மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 2000 ரூபாயை எட்டும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். ஜார்கிராமில் நடந்த அரசு நிகழ்ச்சியில் பேசிய அவர், வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் அதன் பிறகு நாம் எல்லாம் விறகு அடுப்பை பயன்படுத்தும் பழைய நடைமுறைக்கு திரும்ப வேண்டும். பாஜக அரசு மக்களுக்கு இதுவரை ஒன்றும் செய்யவில்லை என்று பேசினார்.