தமிழ் சினிமாவில் ரசிகர்களால் மக்கள் செல்வன் என்று அன்போடு அழைக்கப்படுபவர் விஜய் சேதுபதி. இவர் தென்மேற்கு பருவக்காற்று என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான நிலையில் வில்லன், குணசத்திர வேடம் என எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை ஏற்று சிறப்பான முறையில் நடித்து அசத்துவார். இதன் காரணமாக விஜய் சேதுபதிக்கு பாலிவுட் சினிமா வில்லன் பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. இவர் நடிப்பில் கடந்த வருடம் காத்து வாக்குல ரெண்டு காதல், விக்ரம், மாமனிதன் மற்றும் டிஎஸ்பி போன்ற படங்கள் ரிலீஸ் ஆன நிலையில் மாமனிதன் திரைப்படம் பல்வேறு விருதுகளை குவித்தது.
இவர் தற்போது பாலிவுட் சினிமாவில் நடிகர் ஷாருக்கானுக்கு வில்லனாக ஜவான் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி தன்னுடைய மனைவி மற்றும் குடும்பத்துடன் தன்னுடைய ரசிகர் ஒருவரின் திருமணத்திற்கு சென்றுள்ளார். இந்த திருமணம் விஜய் சேதுபதியின் தலைமையில் நடைபெற்ற நிலையில் தன்னுடைய மனைவியுடன் கலந்து கொண்டு ரசிகரை வாழ்த்தினார். மேலும் ரசிகரின் திருமண விழாவில் நடிகர் விஜய் சேதுபதி கலந்து கொண்டது பலரது மத்தியிலும் வியப்பை ஏற்படுத்தியதோடு பாராட்டுகளும் குவிந்து வருகிறது.
View this post on Instagram