அஜித் நடிப்பில் தற்போது துணிவு திரைப்படம் வெளியாகி வசூலை அள்ளியது. இத்திரைப்படத்தை தொடர்ந்து அஜித் தனது 62-வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இத்திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் படபிடிப்பு எப்போது ஆரம்பமாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தன. இது குறித்த தகவல் வெளியாகாத நிலையில் படத்தின் இயக்குனர் மாறுபடலாம் எனவும் விக்னேஷ் சிவனுக்கு பதிலாக வேறு ஒரு இயக்குனர் நியமிக்கப்படலாம் எனவும் செய்தி வெளியானது.
இந்த நிலையில் தற்போது மீகாமன், தடம், கழகத் தலைவன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இயக்க இருப்பதாக கூறப்பட்டு வருகின்றது. மேலும் படத்தில் இசையமைப்பாளரும் மாற்றப்பட்டு இருப்பதாக செய்தி வெளியாகி இருக்கின்றது. ஏகே 62 திரைப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவன் என அறிவிக்கப்பட்ட போது படத்தின் இசையமைப்பாளர் அனிருத் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது இசையமைப்பாளரும் மாற்றப்பட்டதாக சொல்லப்படுகின்றது. தற்போது அருண்ராஜ் இசையமைக்க இருப்பதாக சொல்லப்பட்டு வருகின்றது. மேலும் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.