![](https://www.seithisolai.com/wp-content/uploads/2025/01/KL-Rahul.jpg)
இங்கிலாந்து அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரிலிருந்து இந்திய வீரர் கே எல் ராகுல் விளகுவதாக தகவல் வெளியாகி உள்ளது. 22 ஆம் தேதி தொடங்க இருக்கும் இந்த தொடர் ஐந்து டி20 போட்டிகளையும் மூன்று ஒரு நாள் போட்டிகளையும் உள்ளடக்கியது. இந்த தொடர் அடுத்த மாதம் நடக்க இருக்கும் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு பயிற்சியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் கே எல் ராகுல் இந்த தொடரில் பங்கேற்கவில்லை என்றும் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான அணி தேர்வில் அவர் பங்கேற்பார் என்றும் பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.