ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு புது மாப்பிள்ளைக்கு விருந்து வைப்பது வழக்கம். அந்த வகையில் ஹைதராபாத்தைச் சேர்ந்த கல்பனா என்பவர் தன்னுடைய மகளுக்கு சமீபத்தில் திருமணம் செய்து வைத்த நிலையில் சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு விருந்து வைத்துள்ளார்.

இதில் கல்பனாவுக்கு 2 மகள்கள் இருக்கும் நிலையில் மல்லிகார்ஜுன் என்பவருக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பாக தன்னுடைய மூத்த மகளை திருமணம் செய்து வைத்துள்ளார். இவர்கள் இருவரையும் வீட்டிற்கு திருமண விருந்து இருக்கு அழைத்த நிலையில் மொத்தம் 130 வகை உணவுகளை மாமியார் சமைத்துள்ளார். மேலும் இனிப்பு மற்றும் காரம் என பல்வேறு வகை உணவுகள் இருந்த நிலையில் அந்த உணவு வகைகளை பார்த்து புது மாப்பிள்ளை வாயடைத்து போய்விட்டார்.