இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகிறது. சில வீடியோக்கள் ரசிக்க வைப்பது ஆகவும் சில வீடியோக்கள் ஆச்சரியப்பட வைப்பதாகவும் சில வீடியோக்கள் கோபத்தை தூண்டுவதாகவும் அமையும். குறிப்பாக செல்ல பிராணிகளின் வீடியோக்கள் பல வெளியாகி மகிழ்ச்சி படுத்துவதாகவும் ஆச்சரியப்படுத்தும் விதமாகவும் இருக்கும். அந்த வகையில் தற்போது instagram-ல் ஒரு வீடியோ வைரல் ஆகி வருகிறது. அந்த வீடியோவில் ஒரு நாயின் செயல்கள் கவனத்தை ஈர்த்துள்ளது. அதாவது ஒரு பெண்மணி பணத்தை வைத்து விளையாடுகிறார்.
அவர் இரு கைகளில் மாறி மாறி ஒரு கல்லை வைக்கும் நிலையில் மற்றொருவர் எந்த கையில் கல்லை வைத்திருக்கிறார் என்பதை கூற வேண்டும். சரியாக கூறினால் பணம் அவருக்கு தவறாக கூறினால் பணம் அந்த பெண்ணுக்கு. ஆனால் அந்தப் பெண் பின்னால் கையை கட்டி கல்லை மாற்றி வைக்கும் போது பின்னால் அமர்ந்திருக்கும் நாய் எந்த கையில் கல்லை வைத்திருக்கிறார் என்பதை காட்டிக் கொடுக்கிறது. வலது கை என்றால் வலது காலையும் இடது கை என்றால் இடது காலையும் நீட்டி காட்டிக் கொடுக்கிறது. சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் பலரும் லைக்ஸ் களை குவித்து வருவதோடு கமாண்டுகளையும் செய்து வருகிறார்கள்.
View this post on Instagram