
இந்த வருடத்தின் முதல் கிராண்ட் ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் மூன்றாவது சுற்று ஆட்டம் நடைபெற்றது.
இதில் செர்பியாவை சேர்ந்த நோவக் ஜோகோவிச் செக்குடியரசை சேர்ந்த தாமஸ் மச்சாக் ஆகியோர் மோதினர். இதில் ஆரம்பம் முதலாகவே ஆதிக்கம் செலுத்திய ஜோகோவிச் 6 – 1, 6 – 4 மற்றும் 6 – 4 என்ற அடிப்படையில் வெற்றி பெற்று 4வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.