
இலங்கை கிரிக்கெட் வீரராக இருப்பவர் மஹீஷ் தீக்ஷனா(24). இலங்கை சுழற்பந்து வீச்சாளரான இவர் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வந்தார். ஆனால் நடப்பாண்டு சீசனில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4.40 கோடிக்கு அவரை ஏலத்தில் வாங்கியுள்ளது. வருகிற மார்ச் 14ஆம் தேதி திகைதி ஐபிஎல் தொடர் தொடங்க உள்ளது. இந்நிலையில் கொழும்பில் மஹீஷ் தீக்ஷனாவுக்கு திருமணம் நடந்துள்ளது.

இவர் தனது காதலியான ஆர்த்திகாவை கரம் பிடித்துள்ளார். இவர்களது திருமணத்தில் நட்சத்திர வீரர்கள் பலரும் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதோடு இவருக்கு சக அணி வீரர்கள் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இவர்களது புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.