சென்னையில் கஞ்சா போதையில் இருந்த இளைஞர்கள், போலீசாரை தாக்கிய சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து டிடிவி தினகரன் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், “சென்னையில் அனைத்து பகுதிகளிலும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகரித்து கொண்டே இருக்கிறது.

ஆளுங்கட்சி பிரமுகர்களின் ஆதரவோடு இந்த கஞ்சா விற்பனை நடைபெறுகிறது. தமிழ்நாடு அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அந்த அலட்சியத்தால் தான் தற்போது போலீசார் தாக்கப்பட்டுள்ளனர்” என்றார்.