உடலின் அனைத்து பாகங்களுக்கும் சுத்திகரிக்கப்பட்ட ரத்தத்தைக் கொண்டு செல்வது இதயத்தின் பிரதான பணி. இப்படி ரத்தத்தை உடலுக்கு கொண்டு செல்லும் வேலையை ரத்த குழாய்கள் செய்கின்றனர். இந்த ரத்த குழாய்களில் ஏற்படும் அடைப்பு காரணமாக இதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டம் பாதிக்கப்படும். அதனால் இதயத்தில் இருந்து உடலின் பிற பாகங்களுக்கு ரத்தத்துடன் செல்லும் ஆக்சிஜன் நிற்பதால் ஏற்படும் விளைவே மாரடைப்பு எனப்படுகிறது. அண்மைக்காலமாக மாரடைப்பு அதிகளவில் ஏற்படுகிறது.

தமிழகத்தில் 100இல் ஒருவருக்கு மாரடைப்பு, பக்கவாதம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக ஆய்வுத் தகவல் ஒன்று தெரிவிக்கிறது. தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநரக பத்திரிகையில் வெளியாகிய அறிக்கையில், ஆய்வில் 1,260 பேர் கலந்து கொண்டதாகவும், அதில் 63% பேர் பெண்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த ஆய்வில், 5இல் ஒருவருக்கு லேசான நெஞ்சு வலி ஏற்பட வாய்ப்பு இருப்பதும் தெரிய வந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.