திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் புனித பாத்திமா தேவாலயம் உள்ளது. இங்கு காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆரோக்கியதாஸ் (39) என்பவர் என்பவர் பாதிரியாராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு பணி மாறுதல் வழங்கப்பட்ட நிலையில் நேற்று வேறொரு கோவிலுக்கு செல்வதாக இருந்ததால் அதற்காக டிக்கெட் முன்பதிவு செய்திருந்தார். ‌ இதற்கிடையில் இந்த ஆலயத்தின் திருவிழா முடிவடைந்த நிலையில் நேற்று முன்தினம் வழக்கம்போல் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றது.

இந்த சிறப்பு பிரார்த்தனையில் பாதிரியார் கலந்து கொள்ளவில்லை என்பதால் ஆலயத்தில் இருப்பவர்கள் அவர் வீட்டிற்கு சென்று பார்த்தனர். அப்போது அறையில் அவர் தூக்கில் பிணமாக தொங்கினார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பாதிரியாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வள்ளியூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகிறார்கள்.