தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் 12-ஆம் தேதி முதல் ஆபரேஷன் கஞ்சா 3.0 திட்டத்தின் மூலம் அதிரடி கஞ்சா வேட்டை நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் கடந்த 19 நாட்களில் 1811 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து சுமார் 1.84 கோடி மதிப்பிலான 1610 கிலோ கஞ்சா மற்றும் 159 வாகனங்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதன்பிறகு 8.83 லட்சம் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதோடு, கஞ்சா வியாபாரிகளின் 127 வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ள நிலையில், அனைத்து மாவட்டங்களிலும் கஞ்சா பதுக்கல், கடத்தல், விற்பனையில் ஈடுபடுபவர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். மேலும் கஞ்சா வியாபாரம் செய்பவர்களின் சொத்துக்களை முடக்க வேண்டும் எனவும் அவர்களின் வங்கி கணக்கை உடனடியாக முடக்க வேண்டும் எனவும் டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.