ஆன்லைன் சூதாட்டத்தின் மீதுள்ள மோகத்தினால் பலர் பணத்தை இழப்பதோடு தற்கொலை வரை சென்று தங்களுடைய உயிரையும் இழந்து விடுகின்றனர். இதனால் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. அதன் பிறகு தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்து சட்டப்பேரவையில் மசோதா இயற்றப்பட்ட நிலையில், மத்திய அரசுக்கு அந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் எனவும் தமிழக அரசு பரிந்துரை செய்தது.

இந்நிலையில் மத்திய அரசு ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை ஒழுங்கு படுத்துவதற்கான வரைமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களுக்கு இந்திய முகவரிகள் மற்றும் விளையாடுவோரின் முகவரியை சரி பார்ப்பது அவசியம். அதன் பிறகு ஆன்லைன் விளையாட்டுக்காக சுய ஒழுங்குமுறை அமைப்புகளை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தில் பதிவு செய்ய வேண்டும். இந்தியாவின் சட்ட விதிமுறைகளை பின்பற்றி விளையாட்டுகள் நடைபெற வேண்டும். மேலும் ஆன்லைன் விளையாட்டில் பணம் வைத்து ஆடும் விளையாட்டுகளுக்கு தகுதியான வயது தொடர்பான சட்டங்களுக்கும் கட்டுப்பட வேண்டும்.