இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி என்பது ஒரு பக்கம் சாதகமாக இருந்தாலும் மறுபக்கம் இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் மோசடி கும்பல் தொடர்ந்து புதுவிதமான மோசடிகளில் ஈடுபட்டு வருகிறது. இது தொடர்பாக மக்கள் மத்தியில் அரசு என்னதான் விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி தொடர் மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் இந்தியாவில் பல லட்சம் ஆண்ட்ராய்டு போன்கள் ஹேக்கிங் செய்யப்படும் அபாயம் உள்ளதாக இந்திய சைபர் பாதுகாப்பு அமைப்பு எச்சரித்துள்ளது. குவால்காம், மெட்டா டெக் ப்ரோஸ்ஸரில் செயல்படும் ஆண்ட்ராய்டு 12, 12 எல், 13, 14 ஆகிய போன்களில் பல குறைகள் இருப்பதாகவும் இவை ஹேக்கிங் செய்யப்படலாம் என்றும் கூறியுள்ளது. உடனடியாக செட்டிங்ஸ் சென்று சாஃப்ட்வேரை அப்டேட் செய்ய வேண்டும் எனவும் ஆண்ட்ராய்டு பயனாளர்களை கேட்டுக் கொண்டுள்ளது