ஆதார் அட்டை குறித்த மூடிஸ் முதலீட்டாளர்கள் நிறுவனம் சேவையின் குற்றச்சாட்டுகளை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் சமீபத்தில் மறுத்துள்ளது. ஆதார் அட்டை உலகின் மிகவும் நம்பகமான அட்டை என்று கூறப்படுகின்றது. அது மட்டுமல்லாமல் சர்வதேச தரத்தின் படி ஆதார் அட்டை வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் முன்னதாக ஐ எம் எப் மற்றும் உலக வங்கி ஆகியவை ஆதாரை பாராட்டியுள்ளன. ஆனால்  மூடிஸ் நிறுவனம் ஆதார் பயோமெட்ரிக் தொழில்நுட்பம் வெப்பமான காலநிலையில் வேலை செய்யாது என்று குற்றம் சாட்டு இருந்த நிலையில் தற்போது அதற்கு ஆதார் அமைப்பு மறுப்பு தெரிவித்துள்ளது.