இந்தியாவில் உள்ள பல அற்புதக் கோயில்களில், ஆண்டுக்கு ஒரே நாளில் மட்டுமே திறக்கப்படும் மர்மமும் ஆன்மீகச் சிறப்பும் நிறைந்த கோயில்கள் பக்தர்களை வியப்பில் ஆழ்த்தி வருகின்றன. குறிப்பாக, மத்திய பிரதேசத்தின் ரைசன் கோட்டையில் உள்ள சோமேஷ்வர் மகாதேவ் சிவபெருமான் கோயில், ஆண்டு முழுவதும் பூட்டப்பட்டு மகா சிவராத்திரி அன்று மட்டும் காலை முதல் மாலை வரை பக்தர்களின் தரிசனத்திற்காக திறக்கப்படுகிறது.

இந்தக் கோயிலில் வீற்றிருக்கும் சிவபெருமானை ஆண்டுக்கு ஒருமுறை தரிசித்து மனதார வேண்டிக்கொண்டால், பக்தர்கள் நீங்கா துயரங்கள் நீங்கி, அவர்கள் நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும் என்பது பல தலைமுறைகளாக நிலவி வரும் தீவிர நம்பிக்கை. சிவராத்திரி நாளில் மட்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று இந்த அற்புத லிங்கத்தைத் தரிசித்து வழிபடுகின்றனர்.

சுதந்திரத்திற்குப் பிறகு ஏற்பட்ட சில வரலாற்று மற்றும் தொல்லியல் துறை நடைமுறைகள் காரணமாக இந்தக் கோயில் பூட்டப்பட்டாலும், பக்தர்களின் ஆன்மீக உணர்வைக் கருத்தில் கொண்டு சிவராத்திரி அன்று மட்டும் சிறப்பு அனுமதி வழங்கப்படுகிறது. அந்த ஒரே நாளில் இறைவனை தரிசிக்க நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் திரண்டு வருகிறார்கள்.

அறிவியலை ஆன்மீக ஆற்றலும், இறைவனின் அருள் அலைகளும் நிறைந்துள்ள திருத்தலங்கள், வெறும் வழிபாட்டுத் தலமாக மட்டுமின்றி பக்தர்களின் நம்பிக்கையை மெய்ப்பிக்கும் அற்புத மையங்களாகவும் திகழ்கின்றன. ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே கிடைக்கும் இந்த அரிய தரிசனம் பக்தர்களுக்கு வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவத்தைத் தருகிறது.